12. நவ சக்தியர்

தீப் பொறிகளைக் கண்டு அஞ்சி ஓடிய உமை
திரும்பி வந்தாள் கயிலை நாதனிடம் மீண்டும்;

மகனைப் பிரான் தோற்றுவித்ததை அறிந்து,
மகன் தன்னிடம் தோன்றவில்லை என்ற சினம்!

“என்னிடம் மகன் தோன்றாது தடுத்த அந்த
விண்ணவர் மனைவியர்க்கும் அதுவே நிகழும்!”

பதறி உமை ஓடியபோது திருவடிச் சிலம்பு,
சிதறியது சில நவரத்தினங்களைத் தரையில்.

சிவனருளால் தோன்றியது அதிசயமாக அந்த
நவரத்தினங்களிலும் தேவியின் திரு உருவம்.

ஒவ்வொரு மணியினின்றும் ஒரு சக்தி தோன்ற,
ஒன்பது சக்திகளையும் சிவன் அருகே அழைத்தார்.

அண்ணலைக் கண்டு காமுற்ற தேவிகள் சிவன்
கண் பார்வையினாலே சூலுற்றனர் உடனே.

உமையின் கோபம் மீண்டும் பெருகிடச் சாபம்,
“அமைவீர் நெடுங்காலம் சூலினைச் சுமந்தபடி!”

அஞ்சி நடுங்கிய தேவிகளின் வியர்வையில்,
அஞ்ச வைக்கும் வீரர் நூறாயிரவர் தோன்றினர்.

பெருமான் பணித்தார் அந்த வீரர்களை,
“முருகன் படை வீரர்கள் ஆவீர்கள் நீங்கள்!”

சூலினைச் சுமந்தனர் நெடுநாள் நவசக்தியர்,
சூலின் சுமை தாங்க முடியாமல் போனது!

சிவனிடம் சென்று முறையிட அவர் அன்னை
சிவகாமியை அருள் புரியும்படி  வேண்டினார்.

வீர மகன்கள் ஒன்பது பேர்கள் தோன்றினர்.
வீரவாகு பிறந்தான் மாணிக்க வல்லியிடம்.

வீர கேசரி பிறந்தான் மௌத்திக வல்லியிடம்.
வீர மகேந்திரன் பிறந்தான் புஷ்பராக வல்லியிடம்.

வீர மகேசுவரரை ஈன்றாள் கோமேதக வல்லி.
வீர புரந்தர் பிறந்தார் வைடூரிய வல்லியிடம்.

வீர ராக்கதர் பிறந்தார் வைர வல்லியிடம்.
வீர மார்த்தாண்டர் பிறந்தார் மரகத வல்லியிடம்,

வீராந்தகர் பிறந்தார் பவள வல்லியிடம்,
வீரதீரர் பிறந்தார் இந்திரநீல வல்லியிடம்.

ஐயனை வணங்கி நின்றனர் ஒன்பதின்மரும்,
அரிய படைக்கலன்கள் அவரிடம் பெற்றனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

1#12. THE NAVA SAKTHI.

Uma ran away fearing the intense heat of the sparks. Later she returned to find out that Siva had created His valorous son, without her involvement.

She became very angry at the Devas who had played a dirty trick on her and cursed that none of their wifes would ever bear children.

When Uma ran away in a great hurry and fear,  some of the navaratnas scattered from her anklets. By Siva’s grace, Uma’s form appeared in each of those gem stones. Each gem became a Sakthi in the perfect likeness of Uma Devi.

Siva called all the nine Devis born out of the nine gems to come near Him. They fell head over heels in love with Siva and became pregnant by His mere glance. Uma became more angry and cursed them that they would bear the fetus in their womb for a very very long time.

Now the Nava Sakthis got frightened and sweated profusely. From the sweat a hundred thousand robust and valorous sons were born. Siva blessed them and commanded them to become the invincible army of his valorous son Murugan.

The Nava Sakthis lived with their garbbam (pregnancy) for a very long time. Soon they were unable to bear the weight of their garbbam. They worshiped Siva and begged for His mercy.

Siva told Uma to bless the Nava Sakthis and she blessed them to deliver their sons. Nine robust and invincible sons were born to those Nine Devis. The nine sons worshiped Siva and got rare and powerful weapons from Him .

The Nava Shakti KumAras would become the constant companions of Murugan later.

Leave a comment

Leave a comment