4b. பிரமனின் கோபம்.

“உண்மையே கூறினாய் நீ மன்மதா!
நன்மையையும் சற்று எண்ணிப்பார்.

உன்னையன்றி இச்செயல் செய்யும்
வன்மையுடையவர் யார் எனக் கூறு!

‘எல்லாம் அவன் செயல்’ என்று நான்
சொல்லாமலேயே நீ அறியாயோ?

தன்னுயிர் பேண விரும்புவதால் – நீ
மன்னுயிர் துயருற விட்டு விடலாமா?

பிறர் துயர் தீர்க்கும் முயற்சியில் – நீ
பிறழ்ந்தால் வந்து சேரும்  தீராப் பழி!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ஆனால்
அன்புடையோர் என்பும் உரியர் பிறர்க்கு.

விருத்திரனைக் கொல்ல வச்சிரத்தை
இரந்து பெற்றான் இந்திரன் ததீசியிடம்.

பல்லுயிர் காக்க நீ  உன்னுயிர் ஈந்தால்
நல்லுலகம் போற்றும், அல்லும் பகலும்.

சூரனின் கொடுமையை அடக்கி ஒடுக்க
வீர மகன் ஒருவன் தோன்றிட வேண்டும்.

அனைத்து உலகையும் காக்கும் பணி
உனக்கு அளிக்கப்பட்டதை உணர்வாய்.”

“இறைவனுக்கு மாறாக நடவேன் நான்!
வேறு எதுவாகிலும் உவந்து செய்வேன்!”

“நயத்தால் அல்லது பயத்தால் செய்வாய்!
மயக்கம் தீர்வாயா? சாபம் கொள்வாயா?”

“சாபம் பெற்று உம்மால் அழிவதிலும்,
கோபம் பெற்று ஈசனால் அழிவதே மேல்.

கடமையை ஆற்றச் செல்லும் எந்தன்
மடமையை ஈசன் மன்னிக்கட்டும்!”

சென்றான் தன் அன்பு மனைவி ரதியிடம்.
சொன்னான் நிகழ்ந்தவற்றை எல்லாம்.

கலங்கிய உள்ளத்தை மறைத்துக்கொண்டு,
கலங்கியவளைத் தெளிய வைத்தான் அவன்.

மலர்க் கணைகள் நிறைந்த தூணி முதுகில்;
மாந்தளிர் உடைவாள் அழகிய இடையில்;

கரும்பு வில்லை ஏந்தினான் தன் கையில்;
கடலே முரசம்! குயில்களே காகளங்கள்!

குதிரைகளோ கிளிகள்! தென்றலே தேர்!
ரதியுடன் பறந்தான் தன் தேரில் ஏறி.

கயிலையை அடைந்து நந்தியைப் பணிய,
ஐயன் கட்டளைப்படி அனுமதித்தான் நந்தி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

1#4b. BRAHMA’S ANGER!

“Truly spoken Manmatha! But think of the welfare of the world. Tell me who else is capable of performing this deed besides you.

Everything is done by God Himself using all the others as instruments. Can you sacrifice the lives of all the others just to save your own? If you refuse so bluntly to help others, you will be blamed all your life.

Those whose hearts are filled with love for the others, will surely be ready to sacrifice themselves for the sake of the others. Indra begged for the backbone of Dadichi – to enable him to kill VruthrAsura.

If you help, your praise will be sung as long as the creation lasts. Wicked Soorapadman’s atrocities must be put an end to. For that Siva must beget a valorous son. Your assistance is needed and you are given a great opportunity to help the world!”

Manmathan still refused to oblige. Brahma lost his temper and threatened him thus, “Either you do as you are told or be prepared to get cursed!”

“It is far better to die facing the anger of the Lord Siva than die by your curse! May Lord Siva forgive me and my folly, since I am only performing the duty assigned to me!”

He went to his wife Rati Devi and told her of all the happenings. She was moved to tears. He consoled her and got ready for his unpleasant and dangerous assignment.

Flowers were his arrows; a tender mango leaf his sword; a sugarcane was his bow; the sea was his drum, the cuckoos were his trumpets; parrots were his horses and the gentle southern breeze was his lovely chariot.

He flew with his lovely wife to Kailash and prostrated to Nandi. Nandhi let him go in, as per the order given by Lord Siva.

Leave a comment

Leave a comment